Headlines

அமெரிக்காவில் விபத்தில் தப்பிய இந்தியர் மற்றொரு விபத்தில் பலி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

     அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் வடக்கு சார்லோட் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்தியாவை சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்தவர் அப்பாராஜு பிருத்விராஜ் (வயது 30) என அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்.

Abbaraju Prithviraj

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் எல்.பி. நகர் பகுதியை சேர்ந்தவர். பிருத்விராஜ், அவருடைய மனைவி மற்றும் நண்பர்கள் கார் ஒன்றில் சென்றபோது, திடீரென மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

சம்பவத்தில், காரில் ஏர்பேக் எனப்படும் பாதுகாப்பு வசதி இருந்துள்ளது. இதனால், விபத்தில் காரில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் காரை விட்டு வெளியேறி சாலையோரம் நடந்து சென்றனர்.

விபத்து பற்றி பொலிசாரிடம் தெரிவிக்க காரில் இருந்த மொபைல் போனை எடுப்பதற்காக பிருத்விராஜ், திரும்பி வந்திருக்கிறார்.

அப்போது மற்றொரு வாகனம் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். 

கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் அவர் 2 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு திருமணம் நடந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

Leave a Reply