அமெரிக்காவில் 5 இந்திய மாணவர்கள் சென்ற கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் பயின்று ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 2 மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கார் விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.