Headlines

இலங்கைக்கு நெருங்கிய நாடொன்றில் பரவத் தொடங்கிய புதிய கொரோனா வைரஸ்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

சிங்கப்பூரில் பரவிவரும் புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள இந்திய மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு நெருங்கிய நாடொன்றில் பரவத் தொடங்கிய புதிய கொரோனா வைரஸ்! | New Type Of Corona Is Spreading In India Singapore

இதில் 290 பேருக்கு கே.பி.2 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 34 பேருக்கு கே.பி.1 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா உலகளாவிய சுகாதார அவசர நிலையாக இல்லை. ஆனாலும் சுகாதார அச்சுறுத்தலாகவே தற்போதும் நீடித்து வருகிறது.

இருப்பினும், ஏராளமான பிறழ்வுகளுடன் கூடிய கொரோனாவின் மாறுபாடு வைரஸ் ஒன்றை உலக சுகாதார அமைப்பு அண்மையில் வகைப்படுத்தியுள்ளது.

இதேவேளை, அனைத்து நாடுகளும் கண்காணிப்பை தொடர வேண்டியதன் அவசியத்தை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.  

Leave a Reply