Headlines

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் ; எதிர்க்கும் ஜோபைடன்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கும் கோரிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காசாவில் இனப்படுகொலை நடப்பதாக இஸ்ரேல் மீது தென் ஆப்பிரிக்கா குற்றம் சாட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் ; எதிர்க்கும் ஜோபைடன் | Arrest Warrant Against Israeli Pm Opposed Zobaidan

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

வழக்கில் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் வாதிடும்போது,

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் காலன்ட் மற்றும் ஹமாஸ் தலைவர்கள் இஸ்மாயில் ஹனியே, முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி, யாஹ்யா சின்வர் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும்” என்று கோரிக்கை முன்வைத்தார்.

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் ; எதிர்க்கும் ஜோபைடன் | Arrest Warrant Against Israeli Pm Opposed Zobaidan

இதற்கு பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கும் கோரிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, இஸ்ரேல் தலைவர்களுக்கு எதிரான கைது வாரண்டுகளுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விண்ணப்பத்தை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையில் எந்தவொரு ஒற்றுமையும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.

Leave a Reply