Headlines

ஒன்றாரியோவில், மகள் என்ற போர்வையில் பெண்ணிடம் மோசடி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ஒன்றாரியோ மாகாணத்தில் மகள் என்ற போர்வையில் பெண் ஒருவரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

எரின் மெக்லெனரி என்ற பெண்ணே இவ்வாற 2500 டொலர்களை இழந்துள்ளார்.

ஒன்றாரியோவின் அஜாக்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒன்றாரியோவில், மகள் என்ற போர்வையில் பெண்ணிடம் மோசடி | Ontario Mother Loses 2 500 To Text Scammer

மகளது தொலைபேசி உடைந்து விட்டதாகவும் இதனால் புதிய எண்ணிலிருந்து அழைப்பதாகவும் கூறி குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தனது மகளின் பெயரின் அனைத்து எழுத்துக்களும் ஒத்துப் போகவும் மேலதிக விபரங்களை தேடிப்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரமாக சில கொடுப்பனவுகளை செய்வதற்கு பணம் அனுப்பி வைக்குமாறு குறித்த குறுஞ்செய்தியில் கோரப்பட்டதாகவும் இதனால் தாம் ஈ-டிரான்ஸ்வர் மூலம் பணத்தை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

95 வீதமான கனடியர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருவதாகவும், மோசடியாளர்கள் பல்வேறு வழிகளில் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply