Headlines

எப்படி என்னை தொடுவாய்? செல்ஃபிக்கு ஆசைப்பட்ட பெண்ணை கடித்துவைத்த குதிரை

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

  செல்ஃபிக்கு ஆசைப்பட்ட பெண்ணை   பக்கிங்ஹாம் அரண்மனை  குதிரை  கடித்துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின்  பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

எப்படி என்னை தொடுவாய்? செல்ஃபிக்கு ஆசைப்பட்ட பெண்ணை கடித்துவைத்த குதிரை | Uk Horse Bit A Woman Who Wanted A Selfie

எப்படி என்னை தொடுவாய்?

சுற்றுலா பயணிகள் அரண்மனையை சுற்றி உள்ள பகுதிகள் முன்பு நின்று அவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள். இந்நிலையில்  லண்டனின் வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் குதிரை படை காவலர்களின் அணிவகுப்பு நடந்துள்ளது.

அப்போது அங்கு சென்றிருந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் குதிரை முன்பு நின்று புகைப்படம் எடுத்துள்ளார். து அந்த சுற்றுலா பயணி புகைப்படம் எடுப்பதற்காக குதிரையை தொட்டுள்ளார்.

இதனால் ஆவேசம் அடைந்த அந்த குதிரை கிளர்ந்தெழுந்து பெண்ணை ஒரு கடி கடித்து தள்ளியது. இதனால் அந்தப்பெண் தடுமாறி கீழே விழுந்தார். எனினும் அந்த குதிரையில் அமர்திருந்த வீரர் கருமமே கண்ணாயினராக அசையாமல் அமர்ந்திருந்தார்.

பின்னர் குதிரை படை வீரர் அந்த குதிரையை சாந்தப்படுத்தி உள்ளார். இதில் தகவல் என்னவென்றால், அந்த குதிரைகள், மற்றவர்களால் தொடப்படுவதை விரும்புவதில்லையாம்.

சொல்லப்போனால், குதிரைகளைத் தொடவேண்டாம் என ஆங்காங்கு அறிவிப்புப் பலகைகளும் அங்கே வைக்கப்பட்டுள்ளன. . இதுதொடர்பான காட்சிகள் எக்ஸ் தளத்தில் வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.

Leave a Reply