Headlines

நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

நடிகர் ஷாருக்கான் அகமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஷாருக்கானின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல்நிலை குணமடைய போதுமான ஓய்வெடுக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்! | Actor Shah Rukh Khan Was Admitted To The Hospital

நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குவாலிபையர் ஐபிஎல் போட்டியைக் காண்பதற்காக நடிகர் ஷாருக்கான், நரேந்திர மோடி மைதானத்திற்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்தார்.

 இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேரடியாக இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பை ஷாருக்கான் கொடுத்தார்.

நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்! | Actor Shah Rukh Khan Was Admitted To The Hospital

இவ்வாறான நிலையில் நேற்று மதியம் திடீரென உடல் உச்ச வெப்பநிலையால் (dehydration) பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இத்தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது ஷாருக்கான் நலமுடன் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply