Headlines

எவரெஸ்ட் சிகரத்தை 2 வாரத்தில் மூன்று முறை ஏறி சாதனை படைத்த நபர்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு வாரத்தில் 3 முறை ஏறி நேபாள மலையேறும் புகைப்படப் பத்திரிக்கையாளருமான பூர்ணிமா ஷ்ரேஸ்தா சாதனை படைத்துள்ளார்.

பூர்ணிமா முதலில் மே 12 அன்று எவரெஸ்ட் சிகரத்தின் 8848.86 மீட்டர் உச்சத்தை அடைந்தார். மீண்டும் அவர் மே 19 அன்று பசாங் ஷெர்பாவுடன் இணைந்து உச்சியை அடைந்தார்.

எவரெஸ்ட் சிகரத்தை 2 வாரத்தில் மூன்று முறை ஏறி சாதனை படைத்த நபர்! | Everest Three Times In 2 Weeks Purnima Achieved

அடுத்ததாக நேற்றையதினம் (26-05-2024) காலை 5:50 மணிக்கு 3வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார்.

பூர்ணிமா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இது நான்காவது முறையாகும். 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் அவர் ஏறினார்.

மேலும், அவர் மனாஸ்லு, அன்னபூர்ணா, தௌலகிரி, கஞ்சன்ஜங்கா, லோட்சே, மகலு மற்றும் மவுண்ட் கே2 உள்ளிட்ட உயரமான பல மலை சிகரங்களை வெற்றிகரமாக எறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply