Headlines

இயற்கையின் கோர தாண்டவம்; மண்ணில் உயிருடன் புதைந்த 2,000 இற்க்கும் அதிகமானோர்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

  பப்புவா நியூ கினியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 2,000-க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக பப்புவா நியூ கினியா பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உள்ள பப்புவா நியூ கினியாவில் கடந்த வாரம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில், பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன.

இயற்கையின் கோர தாண்டவம்; மண்ணில் உயிருடன் புதைந்த 2,000 இற்க்கும் அதிகமானோர் | More Than 2 000 Buried Alive Soil Papua New Guinea

உறங்கிக்கொண்டிருந்த மக்கள்

வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலியானதாக அந்த நாட்டின் அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர்.

மண்ணில் புதைந்த நிலையில் 5 உடல்கள் மற்றும் ஒரு காலும் மீட்கப்பட்டன. இந்த நிலையில், எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் புதையுண்டன.

இயற்கையின் கோர தாண்டவம்; மண்ணில் உயிருடன் புதைந்த 2,000 இற்க்கும் அதிகமானோர் | More Than 2 000 Buried Alive Soil Papua New Guinea

மீட்புப் பணிகள் தீவிரம்

மீட்புப் பணிகள் தீவிரம் அடைந்த நிலையில், 2 ஆயிரத்துக்கும் அதிகமனோர் உயிருடன் புதைந்து இருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். பேரழிவு ஏற்பட்ட எங்கா மாகாணத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதனிடையே, ஐநா அமைப்புடன் தொடர்புடைய இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹன் அக்டோபரக் நேற்று கூறுகையில், ‘670 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இயற்கையின் கோர தாண்டவம்; மண்ணில் உயிருடன் புதைந்த 2,000 இற்க்கும் அதிகமானோர் | More Than 2 000 Buried Alive Soil Papua New Guinea

மேடான பகுதியில் இருந்து மண் தொடர்ந்து சரிந்து வருகிறது. இடிபாடுகள் மற்றும் மண் சரிவு ஏற்படும் பகுதியில் மீட்பு பணிகளை தொடர்வது சிரமமாக உள்ளது’’ என்றார்.

அதேசமயம், சில இடங்களில் மீட்பு பணிகளுக்கான கருவிகள் இன்னும் வரவில்லை என கூறப்படும் நிலையில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகியவை உதவி செய்ய முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply