Headlines

ஐக்கிய அரபு அமீரகத்தில் 19-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த கேரள இளம்பெண்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ஐக்கிய அரபு எமிரேட்சில் தனது கணவடனுடன் வாழ்ந்து வந்த கேரள இளம் பெண் அடிக்குமாடி குடியிருப்பின் 19வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

ஐக்கிய அரபு அமீரகத்தில் 19-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த கேரள இளம்பெண்! | Kerala Girl Died Falling Apartment Uae Fujairah

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 37 வயதான ஷனிபா பாபு இவரது கணவர் சனுஜ் பஷீர் கோயா மற்றும் 2 மகள்களுடன் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள புஜைரா பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஷனிபா பாபு, அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 19-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த கேரள இளம்பெண்! | Kerala Girl Died Falling Apartment Uae Fujairah

இது தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று ஷனிபா பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் 19-வது மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பொலிஸாருக்கு அதில் சந்தேகம் எழுந்துள்ளது. 

அது தொடர்பாக பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் ஷனிபா பாபுவின் கணவர் சனுஜ் பஷீர் கோயாவை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்து வருகின்றது.

விசாரணை முடிவில் தான், ஷனிபா பாபு சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply