Headlines

நடுவானில் வெடித்து சிதறிய வடகொரியா செயற்கைக்கோள்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

  வடகொரியா உளவு செயற்கைக்கோள் நடுவானில் வெடித்து சிதறியதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த நவம்பரில் வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது.

நடுவானில் வெடித்து சிதறிய வடகொரியா செயற்கைக்கோள் | A North Korean Satellite Exploded In Mid Air

இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. விரைவில் 2-வது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்தது.

இந்நிலையில், வடகொரியாவின் 2-வது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது. உளவு செயற்கைக் கோளை ஏற்றிச்சென்ற ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது.

வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது. என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்ததாக வடகொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரவ ஆக்சிஜன்,பெட்ரோலிய இயந்திரத்தில் வெடிப்பு ஏற்பட்டது முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததாக தேசிய விண்வெளி தொழில்நுட்ப நிர்வாகத்தின் துணை இயக்குனர் தெரிவித்தார். வெடித்து சிதறிய வடகொரியா ஏவிய ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

Leave a Reply