Headlines

மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கும்; சீனா உருவாக்கிய புதிய வைரஸ் தொடர்பில் பகீர் தகவல்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

  சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலை விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை உருவாக்கியுள்ளதாகவும், இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் எனவும் கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா உருவாகியுள்ள புதிய மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அச்சுறுத்தலாக அமையலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது . சீன ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ளனர்.

மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கும்; சீனா உருவாக்கிய புதிய வைரஸ் தொடர்பில் பகீர் தகவல்! | A Virus That Kills In Three Days China

மனித உடல் முழுவதும் விரைந்து பரவும்

இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவும். அதோடு எபோலா பாதித்தவர்களிடம் காணப்படுவதைப் போன்ற உறுப்பு செயலிழப்பும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வைரஸ் செலுத்தப்பட்டு ஆய்வில் பயன்படுத்திய சில வெள்ளெலிகளின் கண் இமைகளின் மேற்பரப்பில் சிரங்குகள் ஏற்பட்டு இறுதியில் அவற்றின் கண்பார்வை பறிபோயின.

மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கும்; சீனா உருவாக்கிய புதிய வைரஸ் தொடர்பில் பகீர் தகவல்! | A Virus That Kills In Three Days China

கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் எபோலா வைரஸின் பாதிப்பு, அறிகுறி குறித்து ஆய்வு செய்வதே இதன் நோக்கம் என தெரிவித்த சீன விஞ்ஞானிகள் இந்த வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு உத்திகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

அதேவேளை சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலகம் பல கோடி மக்கள் உயிரிழந்த நிலையில், மீண்டுமொரு வைரஸை உருவாக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply