Headlines

வெளிநாடொன்றில் பயங்கர விபத்து சம்பவம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

பாகிஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழ்ந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

லாகூரில் இருந்தூ 350 கிமீ தொலைவில் உள்ள முசாபர்கர் மாவட்டத்தில் நேற்று பயணிகள் வேன் ஒன்று டிரக் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

விபத்து தொடர்பில் அவசர சேவை மீட்பு அளித்த தகவல் அளிக்கப்பட்டது, இதேவேளை பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர்வாசிகள் காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு செல்லும் வழியிலேயே அவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே காயமடைந்த ஒன்பது பேரில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிக வேகம் காரணமாக வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் வேன் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply