Headlines

கனடாவில் குடியுரிமை வழங்க புதிய சட்டம் ; தமிழர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவிற்கு வெளியே பிறந்த கனேடியர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க அனுமதிக்கும் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை வம்சாவளியின் அடிப்படையில் கனேடிய அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய குடிமக்களை சேர்க்கும் வகையில் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லரினால் இந்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய கனேடிய பிரஜைகளின் குழந்தை வெளிநாட்டில் பிறந்தாலும், கனேடிய குடியுரிமை வழங்கப்படும் சட்டம் மாற்றி அமைக்கப்படவுள்ளது.

கனடாவில் குடியுரிமை வழங்க புதிய சட்டம் ; தமிழர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை | New Law To Grant Citizenship In Canada

2009 ஆம் ஆண்டில், முன்னாள் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரின் அரசாங்கம் சட்டத்தை மாற்றியது.

இதனால் வெளிநாட்டில் பிறந்த கனேடிய பெற்றோர்கள் தங்கள் குழந்தை கனடாவில் பிறக்காத வரை அவர்களின் குடியுரிமையை வழங்க முடியாது.இந்த நடைமுறை புதிய சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளது

இதற்கமைய கனடாவில் வாழும் தமிழர்களுக்கு வெளிநாடுகளில் பிள்ளைகள் பிறந்தாலும் அவர்கள் கனேடிய பிரஜைகளாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply