Headlines

கிராமத்திற்குள் புகுந்து கொடூர தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள்! 7 பேர் உயிரிழப்பு

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

நைஜீரியாவின் நைஜர் மாகாணம் முன்யா நகரில் உள்ள கிராமத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து சரமாரியான தாக்குதலை மேற்கொண்டதில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்நிலையில், நைஜீரியாவின் நைஜர் மாகாணம் முன்யா நகரில் உள்ள கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பண்டிட்ஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்தனர்.

கிராமத்தில் இருந்த உணவு பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த பயங்கரவாத கும்பல் தடுக்க முயன்ற கிராமத்தினர் 3 பேர், அரசு ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவினர் 4 பேர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பின்னர், கிராம மக்கள் 150 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.

இதையடுத்து, அந்த கிராமத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் கடத்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply