Headlines

டைட்டானிக் கப்பலை பார்வையிடத் தயாராகும் அமெரிக்க செல்வந்தர்

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அமெரிக்காவின் – ஓகாயோ பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரரான லேரி கானர் (Larry Connor) கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைத்து வருகிறார்.

இதன்படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு கடலுக்கு அடியில் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.

74 வயதான லேரி டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக ட்ரைடன் சப்மரைன்ஸ் என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார்.

12,500 அடி ஆழம்

அவருக்காக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியில் இரண்டு பேர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் சுமார் 12,500 அடி ஆழம்வரை செல்லும் இந்த பயணத்தில் அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் கப்பலை பார்வையிடத் தயாராகும் அமெரிக்க செல்வந்தர் | A Wealthy American Prepares To Visit The Titanic

இது குறித்து லேரி தெரிவித்துள்ளதாவது,

“டைட்டானிக் கப்பலை பார்க்க செல்லும் வெறும் பயணம் அல்ல. இது ஆய்வு சார்ந்த விடயமாகும்.

இதன் மற்றொரு நோக்கம் என்னவென்றால் பாதுகாப்பான முறையில் ஆழ்கடலுக்கு பயணிக்கலாம் என்பதை உலகுக்கு நிரூபிப்பது” என கூறியுள்ளார்.

இந்த நீர்மூழ்கிக்கு ‘தி எக்ஸ்புளோரர் ரிட்டர்ன் டு தி டைட்டானிக்’ என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 2 மணி நேரத்தில் கடலில் 13,000 அடி ஆழம் வரை இதில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply