உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com
இந்தியா- புதுடில்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்குப் புறப்படவிருந்த IndiGo விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
விமானத்தில் கிடந்த துண்டுக் காகிதத்தில் “bomb @5.30’‘ என்று எழுதப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காலை (28 மே) விமானம் புறப்பட தயாரான நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தில் இருந்த 176 பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சோதனை செய்ததில் அது வெறும் புரளி என்பது உறுதிசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
