Headlines

தைவானின் சுதந்திரம் என்பது போருக்கு சமம்; சீன ராணுவம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

   சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் தாம் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன ராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரல் ஜிங் ஜியான்பெங் கூறுகையில்,

தைவானின் சுதந்திரம் என்பது போருக்கு சமம்; சீன ராணுவம் | Taiwan S Independence Is Tantamount To War

“தைவானை சீனாவிடம் இருந்து பிரிந்து செல்ல சீன ராணுவம் ஒருபோதும் அனுமதிக்காது. தைவானின் சுதந்திரம் என்பது போருக்கு சமம்” என்று தெரிவித்தார்.

தைவானின் சுதந்திரத்திற்காக போர் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காகவும், சீனாவுடன் தைவான் மீண்டும் ஒன்றிணைவதை ஊக்குவிப்பதற்காகவும், வெளிப்புற தலையீடுகளை எதிர்ப்பதற்காகவும் சீன ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து சுயாட்சியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா, அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது தைவானை சுற்றி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.    

Leave a Reply