தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேல் போரில் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் உள்ளது.

குறித்த இயக்கத்தினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையிலே இஸ்ரேல் பதிலடியாக இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
மேலும் எல்லை நகரமான கிரியாத் ஷ்மோனாவில் உள்ள இஸ்ரேல் இராணுவத் தளம் மீது ரொக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.