Headlines

93 வயதில் 5-வது திருமணம்; வியப்பில் நெட்டிசன்கள்!

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

 அமெரிக்காவில் பிரபல ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக், தனது 93-வது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபாக்ஸ் நியூஸ் கார்ப்பரேஷன் உட்பட பல்வேறு ஊடக நிறுவனங்களை நிறுவியவர். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 19.9 பில்லியன் டாலர்களாகும்.

93 வயதில் 5-வது திருமணம்; வியப்பில் நெட்டிசன்கள்! | Rupert Murdoch Married 5 Time At The Age Of 93

 67 வயதான  பெண்னுடன் திருமணம்

இந்நிலையில் அவரது காதலியான 67 வயதான எலெனா ஜோகோவாவை அவர் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. எலெனா, ரஷ்ய நாட்டை சேர்ந்தவர். தற்போது அமெரிக்க நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

93 வயதில் 5-வது திருமணம்; வியப்பில் நெட்டிசன்கள்! | Rupert Murdoch Married 5 Time At The Age Of 93

அவர் உயிரியல் துறை வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ரஷ்ய நாட்டு அரசியலில் ஈடுபட்டு வரும் அலெக்சாண்டரின் முன்னாள் மனைவி. ரூபர்ட் முர்டோக்குக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள் உள்ளனர்.

ரூபர்ட் முர்டோக் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர். 1985-ல் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். கடந்த 1956-ல் அவருக்கு முதல் திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு 1967, 1999 மற்றும் 2016-ல் அடுத்தடுத்த திருமணங்களை செய்து கொண்டபோதும்  அந்த  திருமணங்கள்   அனைத்தும் விவாகரத்தில்  முடிந்த  நிலையில் தற்போது  ஐந்தாவதாக  எலெனாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.     

Leave a Reply