Headlines

கனடாவிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமான சேவை

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

இந்தியாவிற்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக கனடிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா அறிவித்துள்ளது.

ரொறன்ரோவிற்கும் மும்பைக்கும் இடையில் இந்த நேரடி விமான சேவை முன்னெடுக்கப்பட்ட உள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி இந்த சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமான சேவை | Air Canada Expands Service To India To Non Stop

ரொறன்ரோவிற்கும் மும்பைக்கும் இடையில் வாராந்தம் 4 விமான சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொன்றியாலில் இருந்து டெல்லி நோக்கிய விமான சேவையும் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாள்தோறும் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு கனடாவில் இருந்து பயணிப்போரின் வசதி கருதி கல்கரியிலிருந்து டெல்லிக்கு விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாவும் இது லண்டனூடாக பயணிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சேவையும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது.

எயார் கனடா விமான சேவை நிறுவனம் வாராந்தம் இந்தியாவிற்கு 25 விமான சேவைகளை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply