Headlines

பறந்து கொண்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கிய ஜெட் விமானம்… மூவருக்கு நேர்ந்த நிலை!

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ரஷ்யாவில் மாஸ்கோ அருகே பயணிகள் இல்லாமல் பறந்து கொண்டிருந்த ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில்  விமானத்தில் இருந்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுகோய் சூப்பர்ஜெட் 100 ரக விமானம் மாஸ்கோ பகுதியில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய அவசர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறந்து கொண்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கிய ஜெட் விமானம்... மூவருக்கு நேர்ந்த நிலை! | Moscow Russian Passenger Jet Crashes 3 Staffs Died

இந்த விமானம் ரஷ்ய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோம் நிறுவனத்திற்கு சொந்தமான காஸ்ப்ரோம் ஏவியாவுக்கு சொந்தமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய தலைநகருக்கு தென்கிழக்கே 110 கிலோமீட்டர் (68 மைல்) தொலைவில் உள்ள லுகோவிட்சியில் உள்ள விமானம் தயாரிக்கும் ஆலையில் இருந்து விமானம் புறப்பட்டது.

மாஸ்கோவின் நுக்கோவோ விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.

Leave a Reply