Headlines

இங்கிலாந்தை வீழ்த்தி 4ஆவது யூரோ பட்டத்தை வென்றது ஸ்பெயின்

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற யூரோ (Euro) 2024 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியின் முடிவில் ஸ்பெயின் அணி இங்கிலாந்தை வீழ்த்தி  4ஆவது யூரோ பட்டத்தை வென்றது.

பெர்லின் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணிக்காக மைக்கேல் ஓயர்சபல் மற்றும் நிகோ வில்லியம்ஸ் ஆகியோர் கோலடிக்க, கோல் பால்மரின் முயற்சி பலனளிக்காமல் போக, ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

2-1 என்ற கோல் கணக்கில்

24 அணிகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடரிலிருந்து இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதிப்பெற்றன.

முதல் பாதி கோல்கள் இல்லாமல் முடிந்தத நிலையில் இரண்டாம் பாதியின் 47வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கோல் கிடைத்தது.

இங்கிலாந்தை வீழ்த்தி 4ஆவது யூரோ பட்டத்தை வென்றது ஸ்பெயின் | Spain Beat England To Win Their 4Th Euro Title

நிகோ வில்லியம்ஸ் (Nico Williams) கோல் அடிக்க அதற்கடுத்த 73வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் கோலே பால்மர் (Cole Palmer) the edge of the boxயில் உதைத்த பந்து கோலாக மாறியது.

இதனைத் தொடர்ந்து 86வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் ஒயர்சபால் (Mikel Oyarzabal) அடித்த கோல், அந்த அணியின் வெற்றி கோலாக மாறியது.

கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து கோல் அடிக்காததால், இறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தை வீழ்த்தி 4ஆவது யூரோ பட்டத்தை வென்றது ஸ்பெயின் | Spain Beat England To Win Their 4Th Euro Title

தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியின் 17 வயது வீரர் லாமின் யாமல் வென்றார். தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஸ்பெயினின் ரோட்ரி வென்றார்.

இதன்மூலம் 1964, 2008 மற்றும் 2012க்குப் பிறகு, நான்காவது முறையாக ஸ்பெயின் நான்காவது முறையாக யூரோ கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply