Headlines

அதானி மீது அமெரிக்காவில் குற்றவியல் வழக்கு பதிவு!

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டதாக நியூயார்க் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர்கள் கொடுக்க அதானி முன்வந்தார் என்றும், லஞ்சம் தொடர்பான தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளைப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது சட்டப்படி தவறான செயல் எனக் குறிப்பிட்டு நியூயார் நீதிமன்றத்தில் புதன்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.

அதானி மீது அமெரிக்காவில் குற்றவியல் வழக்கு பதிவு! | Criminal Case Registered Against Adani In The Us

முதலீடுகளைப் பெற்று முறைகேடு

லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் கடன் தருபவர்களிடம் இருந்து 300 கோடி டாலருக்கு மேல் கடனாகவும் பத்திரமாகவும் அதானி நிறுவனம் பெற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெளதன் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் புகாரில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 2-வது பணக்காரரும், உலகளவில் 22-வது பணக்காரருமான அதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து இதுவரை அதானி தரப்பும், மத்திய அரசு தரப்பிலிருந்தும் விளக்கம் அளிக்கவில்லை.

மேலும் , அதானி நிறுவனம் வெளிநாடுகளில் போலி நிறுவனத்தை உருவாக்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply