Headlines

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தகுதிபெற்ற கனடா அணி

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நடைபெறவுள்ள 10வது ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு 13வது அணியாக கனடா தெரிவாகியுள்ளது.

குறித்த உலகக்கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தகுதிபெற்ற கனடா அணி | Canada Team Qualifies For Cricket World Cup Series

13வது அணியாக தகுதி 

இதில் 4 அணிகள் இடையிலான அமெரிக்க மண்டலத்துக்கான தகுதி சுற்று கனடாவின் ஆன்டாரியோ நகரில் நடைபெறுகிறது.

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் கனடா அணி, பஹாமாசை 57 ஓட்டங்களில் சுருட்டியதுடன், அந்த இலக்கை 5.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்த கனடா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்ததுடன், T20 உலகக்கிண்ண தொடருக்கான 13வது அணியாக தகுதி பெற்றது.  

Leave a Reply