Headlines

காதல் முறிவு; 15,500 அடி உயரத்தில் இருந்து குதித்த காதலி; விசாரணையில் அதிர்ச்சி!

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

   பிரிட்டனில் தனது காதலனுடன் பிரிந்த சில மணி நேரத்திலேயே, 15,500 அடி உயரத்தில் இருந்து குதித்து, ஒரு இளம் பெண் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேட் டாமரெல் (Jade Damarell) என்ற 32 வயது ஸ்கைடைவிங் வீராங்கனை, ஏப்ரல் 27 அன்று டர்ஹாம் கவுண்டியில் உள்ள ஒரு விமான நிலையத்தில் இருந்து சாகசத்திற்காகக் குதித்தார்.

காதல் முறிவு; 15,500 அடி உயரத்தில் இருந்து குதித்த காதலி; விசாரணையில் அதிர்ச்சி! | Love Breakup Jade Damarell Jumps 15 500 Feet

32 வயது ஸ்கைடைவிங் வீராங்கனை

500-க்கும் மேற்பட்ட முறை வெற்றிகரமாக குதித்த அனுபவம் வாய்ந்த ஜேட், அன்று ஒருமுறை கூட தனது பாராசூட்டைத் திறக்க முயற்சிக்கவில்லை என கூறப்படுகின்றது. வழக்கு விசாரணையின் போதுதான் காரணம் வெளிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஜேட் தனது காதலனுடன் பிரிந்துள்ளார். அந்த சோகத்தின் உச்சத்தில், அவர் வேண்டுமென்றே பாராசூட்டைத் திறக்காமல், “தானாகவே பாராசூட்டைத் திறக்கும் கருவியையும்” (AAD) அணைத்துவிட்டு குதித்துள்ளார்.

நீதிபதி லெஸ்லி ஹாமில்டன், இந்த மரணம் தற்கொலைக்கான நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட ஒரு செயல் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

காதல் முறிவின் சோகத்தில், உலகத்தின் மிக உயர்ந்த சிகரத்தில் இருந்து குதித்து உயிர்விட்ட இந்த நிகழ்வு, ஸ்கைடைவிங் உலகில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply