Headlines

ஹமாஸின் தலைநகர் காசா அழிக்​கப்​படும்; இஸ்​ரேல் பாது​காப்பு அமைச்​சர் எச்சரிக்கை

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

போரை முடிவுக்கு கொண்டு வரு​வதற்​கான இஸ்​ரேலின் நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்​கா​விட்​டால் குறிப்​பாக அனைத்து பணயக் கைதி​களை​யும் விடு​வித்​து, ஆயுதக்​குறைப்​புக்கு முன்​வ​ரா​விட்​டால் ஹமாஸின் தலைநகர​மான காசா அழிக்​கப்​படும் என இஸ்​ரேல் பாது​காப்பு அமைச்​சர் எச்​சரித்​துள்​ளார்.

இஸ்​ரேலுக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இடையே இரண்​டாம் கட்ட போர் நிறுத்​தம் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

இதில் இஸ்​ரேல் விதித்த நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்க மறுத்​தது. இதையடுத்து காசா மீது இஸ்​ரேல் மீண்​டும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில் இஸ்​ரேல் பாது​காப்பு அமைச்​சர் இஸ்​ரேல் காட்ஸ், தனது எக்ஸ் தளத்​தில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Leave a Reply