Headlines

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மகேந்திர சிங் தோனி

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

சிஸ்கே வீரர் எம்எஸ் தோனி ஐபிஎல் 2024ல் நான்கு மெகா சாதனைகளை படைத்துள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி (31) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் தோனி 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்தார்.இன்னிங்ஸின் கடைசி ஓவரில் 20 ஓட்டங்கள் அடித்து திணறடித்தார்.

தோனி

இதன்மூலம் ரி20 கிரிக்கெட்டில் 7000 ஓட்டங்களைக் கடந்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

dhoni 2024 ipl

மேலும், 42 வயதான இவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் 5000 ஓட்டங்களைக் கடந்த முதல் விக்கெட் கீப்பரும் ஆவார். ஐபிஎல் போட்டிகளில் 19வது மற்றும் 20வது ஓவரில் 100 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தோனி இதுவரை 6 முறை 20வது ஓவரில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

4 சாதனைககள்

ஐபிஎல்லில் 20வது ஓவரில் அதிக முறை 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை எம்எஸ் தோனி – 6 முறை ரோஹித் சர்மா – 3 முறை மார்கஸ் ஸ்டோனிஸ் – 3 முறை ஏபி டி வில்லியர்ஸ் – 3 முறை யுவராஜ் சிங் – 2 முறை டேவிட் மில்லர் – 2 முறை கிறிஸ் மோரிஸ் – 2 முறை ஹர்திக் பாண்டியா – 2 முறை கெய்ரோன் பொல்லார்ட் – 2 முறை எடுத்துள்ளனர்.

csk vs dc

இந்த சீசனில் தோனி சிஸ்கேவின் மூன்றாவது போட்டியிலேயே களமிறங்கியுள்ளார், சிஸ்கே போட்டியில் தோற்றாலும் தோனியின் அதிரடி ஆட்டம் எல்லோராலும் பேசப்பட்டது.

Leave a Reply